விவசாயம்

மாடுகளுக்கான சமவிகித உணவு !

ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும். அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும். அவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, ...

Read More »

இயற்கை உரங்களால் ஏற்படும் நன்மைகள்

இயற்கை விவசாயம்

மண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் கழிவு உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம், உரமேற்றிய தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் பற்றி அறிந்தும், தயாரித்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். மாடு, ஆடுகளின் சாணம் மக்கிய பின் சிறந்த உரமாக பயன்படுகிறது. ‘எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாய் இருக்கும். காளைகளின் பலத்தினாலே மிகுந்த வரத்துண்டு’ என முன்னோர் கூறினர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ”பசுக்கள், காளைகளை ஒவ்வொரு விவசாயியும் ...

Read More »

இயற்கை முறையில் வாழை சாகுபடி

வாழை

நம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி… போன்றவை தமிழ்நாட்டில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ரகங்கள். ரகங்களைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும். தரமான விதைக்கிழங்கு அவசியம். வாழையை சுழற்சிப்பயிர், கலப்புப்பயிர், ஊடுபயிர், சார்புப்பயிர்… என அனைத்து வகையாகவும் பயிர் செய்யலாம். இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். விதைகள் மூலம் வாழைக்கன்றுகள் உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதால், ...

Read More »

மாடு வளர்ப்பு

மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன் விவரம்: சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும். முக்கிய ...

Read More »

தென்னை மரம்

தென்னை மரம்

தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தேங்காய் மரத்தை அதிக அளவு காணலாம். 15-30 மீட்டர் உயரமாக வளரும். பயன்கள் :

Read More »