Author Archives: admin

ஆர்ப்பாட்டம் – தேனி மாவட்டம்

நமது சங்கத்தின் ஏற்ப்பாட்டில் தேனியில், மாவட்ட தலைவர் திரு.அன்பழகன் தலைமையில்,மாவட்ட செயலாளர் திரு.திருமூர்த்தி முன்னிலை வகிக்க, நமது மாநில விவசாயிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேசியச்செயலாளர் திரு.பெருமாள்,மாநில பொதுச்செயலாளர் திரு.பார்த்தசாரதி மற்றும் பாரதிய விவசாய பொருளியல் ஆய்வு மையத்தின் மாநில செயலாளர் திரு.கார்த்திகேயன் சிறப்புரையாற்றினர்.

Read More »

மாநில செயற்குழு – மார்கழி , 2048-49

2017 டிச 23,24 ஆகிய தேதிகளில் நமது பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு கூட்டம், தலைவர் திரு.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது .தென்பாரத அமைப்பு செயலாளர் .திரு.ஸ்ரீ கணேசன் ஜி, இந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கை ஆண்டு என்பதால் பொறுப்பாளர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உறுப்பினர் சேர்ப்பதில் தீவிரம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தினார் . இக்கூட்டம் அகில பாரத துணைத்தலைவர் திரு.பிரபாகர் கேல்கர் ஜி வழிநடத்த , தேசியச்செயலாளர் திரு.பெருமாள் ஜி மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு.பார்த்தசாரதி ஜி ,மாநில அமைப்பு செயலாளர் திரு.கோபி ...

Read More »

பயிர்ச்சி முகாம்

நமது சங்கத்தின் கோவை கோட்ட பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்ச்சி முகாம் , ஸ்ரீ வாகீஸ்வரி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . சங்கத்தின் கோவை , நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . முகாமை வழிநடத்தும் பொருட்டு மாநில தலைவர் திரு. சுந்தரராஜன் அவர்களும் , மாநில அமைப்புச்செயலாளர் திரு. கோபி ஜி மற்றும் தேசியச்செயலாளர் திரு.பெருமாள் ஜி அவர்களும் வந்திருந்தனர் . பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது .

Read More »

கிராம காரியகர்த்தர்கள் கூட்டம்

இன்று 06 .08 .2017 ஞாயிற்றுக்கிழமை பாரதிய கிசான் சங்க கோவை கோட்ட கிராம காரியகர்த்தார்கள் கூட்டம் நடைபெற்றது . சுமார் 32 கிராமங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள் . பரம்பிக்குளம் ஆழியார் திட்ட பாசனம் பற்றிய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன . கூட்ட முடிவில் PAP சார்ந்த கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . ௧) மழை வளத்தை காக்க மலைகளில் சோலை வனங்களை மீழ் அமர்த்த வேண்டும் ௨) தென்மேற்கு பருவ மழைக்கு காரணியாக விளங்கும் மேற்கு மலை தொடர்ச்சியை காக்க போர்க்கால அடிப்படையில் நம் நாட்டின ...

Read More »

தென்னை விவசாயிகள் சந்திப்பு

1. தேசிய அளவில் தற்போதயை நிலவரப்படி தேங்காய் ஒன்றுக்கு ரூபாய். 20.55/-அல்லது டன் ஒன்றுக்கு ரூபாய்.41100/- மற்றும் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய்.137/- என்று மத்திய மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் . 2.அனைத்து விவசாய விலை பொருட்களுக்கும் லாபகரமான விலை வழங்குவதாக இருந்தால் விவசாயிகளுக்கு மானியமோ இலவசமோ தேவையில்லை.ஆனால் தற்போதய சூள்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். 3.பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் ...

Read More »

மாடுகளுக்கான சமவிகித உணவு !

ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும். அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும். அவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, ...

Read More »

பயிற்சிகள்

பயிற்சியளிப்பதற்கென்றே தனி குழுக்கள் அமைப்பது, பயிற்சிக்கான பயணங்கள் தேசிய மற்றும் உலகளவில் ஏற்பாடு செய்வது, கண்காட்சிகள் நடத்துவது, விவசயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள் நடத்துவது.

Read More »

நமது பாரம்பரியம்

பாரம்பரியமான நமது விவசாயம் சார்ந்த அறிவு நுணுக்கங்களை சேகரித்து, பரிசோதனை செய்து, சிறந்த உத்திகளை இணைத்து, மேம்படுத்தி விவசாயிகளுக்கு வழங்குவதின் மூலம் நமது பாரம்பரியத்தை மற்ற நாடுகளுக்கு பறிகொடுக்காமல் தடுத்து காப்பது.

Read More »

வளங்கள்

நமது தேசத்தின் பாரம்பரியமான விவசாய முறைகளை காத்து, வளர்ந்து வரும் புதிய உத்திகளை இணைத்து சூழலியல் பாதுகாப்பு, மண் வளம், நீர் வளம், விதைத் தன்மை, பசு, தாவரம் மற்றும் உயிர் வளத்தை காத்திட.

Read More »