கிராம காரியகர்த்தர்கள் கூட்டம்

இன்று 06 .08 .2017 ஞாயிற்றுக்கிழமை பாரதிய கிசான் சங்க கோவை கோட்ட கிராம காரியகர்த்தார்கள் கூட்டம் நடைபெற்றது . சுமார் 32 கிராமங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள் . பரம்பிக்குளம் ஆழியார் திட்ட பாசனம் பற்றிய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன . கூட்ட முடிவில் PAP சார்ந்த கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
௧) மழை வளத்தை காக்க மலைகளில் சோலை வனங்களை மீழ் அமர்த்த வேண்டும்
௨) தென்மேற்கு பருவ மழைக்கு காரணியாக விளங்கும் மேற்கு மலை தொடர்ச்சியை காக்க போர்க்கால அடிப்படையில் நம் நாட்டின மரங்களை நட்டி வளர்க்க வேண்டும் .     ௩) பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் படி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு முறையான, முழுமையான தண்ணீர் வழங்கி உறுதி செய்ய வேண்டும் .

௪) ஆனைமலை ஆறு – நல்லார் திட்டத்தை விரைந்து முடித்து விவசாய்களுக்கு அதன் மூலம் தண்ணீரை உறுதி செய்ய வேண்டும் .

 

Leave a Reply