மாநில செயற்குழு – மார்கழி , 2048-49

4f1237d8-575f-4855-b722-7f26b9dcdeed2017 டிச 23,24 ஆகிய தேதிகளில் நமது பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு கூட்டம், தலைவர் திரு.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது .தென்பாரத அமைப்பு செயலாளர் .திரு.ஸ்ரீ கணேசன் ஜி, இந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கை ஆண்டு என்பதால் பொறுப்பாளர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உறுப்பினர் சேர்ப்பதில் தீவிரம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தினார் . இக்கூட்டம் அகில பாரத துணைத்தலைவர் திரு.பிரபாகர் கேல்கர் ஜி வழிநடத்த , தேசியச்செயலாளர் திரு.பெருமாள் ஜி மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு.பார்த்தசாரதி ஜி ,மாநில அமைப்பு செயலாளர் திரு.கோபி ஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . தீர்மானங்கள் கீழ்கண்ட படி நிறைவேற்றப்பட்டது .
1) ஒக்ஹி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு,இறந்துபோனவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
2) மழை நீர் அறுவடை செய்யும் பொருட்டு ஏரி,குளங்கள்,எ பி சி ட என வகைப்படுத்தப்பட்டுள்ள கால்வாய்களை பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை ஒருங்கிணைந்து தூர் எடுத்தல் மற்றும் ஆக்ரிமிப்புகள் அகற்றுதல் பணிகளை செய்வேண்டும்.
3) மின் இணைப்பிற்கு பதிந்துள்ள விவசாயிகளுக்கு, தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.மேலும் தடையற்ற மின்சாரம் விவசாயத்திற்கு வழங்க வேண்டும்.
4) எண்ணெய் வித்து உற்பத்தி விவசாயிகளின் நலன் கருதி தேங்காய் மற்றும் நிலக்கடலை எண்ணெய்யை மத்திய உணவு பட்டியலில் சேர்க்க தமிழக வலியுறுத்த வேண்டும். பாமாயிலை இறக்குமதி செய்து பொது விநியோகத்திட்டத்தின் மூலம் விற்பனை செய்வதை கண்டிக்கின்றோம்.
5) இயற்கைச்சீற்றத்தால் ஏற்படும் விவசாயிகளின் இறப்பிக்கு நபர் ஒன்றுக்கு ரூ.20 லட்சம் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும்.
6) விவசாயிகள் தங்களது குடும்பச்சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து பதியும் போது தமிழக அரசு வசூலிக்கும் பதிவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
7) தற்போது உள்ள பயிர் பாதுகாப்புத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து விவசாயிகள் பயன்பெறும் விதமாக ஆவண செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8) தமிழக அரசு நெல் மற்றும் கரும்பிற்கு அறிவிக்க வேண்டிய ஆதரவு விலையை உடனே அறிவிக்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு இலாபகரமான விலையை வழங்கும் வரை அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1700/- கோடியை உடனடியாக கொடுக்கவேண்டும்.
9) பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் .
10) மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுக்க மாவட்டம் தோறும் ஜனவரி 23ம் தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply