தென்னை விவசாயிகள் சந்திப்பு

1. தேசிய அளவில் தற்போதயை நிலவரப்படி தேங்காய் ஒன்றுக்கு ரூபாய். 20.55/-அல்லது டன் ஒன்றுக்கு ரூபாய்.41100/- மற்றும் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய்.137/- என்று மத்திய மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் .

2.அனைத்து விவசாய விலை பொருட்களுக்கும் லாபகரமான விலை வழங்குவதாக இருந்தால் விவசாயிகளுக்கு மானியமோ இலவசமோ தேவையில்லை.ஆனால் தற்போதய சூள்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்.

3.பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக லாபகரமான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் ஆக்கபூர்வமான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் உள்நாட்டு தேஙகாய் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களின் விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் இறக்குமதியாகும் எண்ணெய்க்கு இறக்குமதி குவியலுக்கு எதிரான வரி விதித்து உள்நாட்டு உற்பத்தியினை பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்

4. தேசிய அளவில் நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
5. தேங்காய் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் கலப்படத்தை தடுக்க வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
6. தென்னை வாரியத்தின் தலைமையகத்தை பொள்ளாச்சியில் நிறுவ வேண்டும் .
7. மத்திய , மாநில அரசுகள் இயற்க்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் .

Leave a Reply