அறிமுகம்

பாரதிய கிசான் சங்கம்

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களின் ஒருவரான திரு.தத்தோபந்த் தெங்கடி அவர்களால் 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் நாள் தேசிய அளவில் சுமார் 650 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

அரசியல் சார்பற்று விவசாயிகளால், விவசாயிகளுக்கென்றே தோற்றுவிக்கப்பட்டு தேச முழுமைக்குமான வலிமையான இயக்கமாக உறுப்பினர்களை கொண்டு வளர்ந்து நிற்கின்றது.

எந்த ஒரு அரசியல் சார்பும் இல்லாமல் தேசிய அளவில் விவசாயிகளின் நலனுக்காகவே அர்பணிப்புணர்வுக் கொண்ட காரியகர்த்தர்களைக் கொண்டு இயங்கும் ஒரே இயக்கம் என்ற பெருமை பாரதிய கிசான் சங்கத்திற்கு உண்டு.

அமைப்பு

பாரதிய கிசான் சங்கம் தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட இயக்கமாகும். அதனை சார்ந்து தமிழ்நாட்டிலும் பாரதிய கிசான் சங்கம் பதிவு பெற்றது. உறுப்பினர்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அது போலவே காரியக்கமிட்டியும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.

விவசாயம் செய்யக்கூடிய விவாசியிகள், விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள், விவசாய கூலி வேலை செய்பவர்கள், மீன் பிடி மற்றும் அதை சார்ந்த தொழில் செய்பவர்கள், பசு வளர்ப்பு மற்றும் அதை சார்ந்து தொழில் வியாபாரம் செய்பவர்கள், தோட்டக்கலை என்று அனைத்து வகையினர் விவசாயிகள் என்றே பாரதிய கிசான் சங்கம் கருதுகிறது. எனவே எந்த விதமான பாகுபாடுமின்றி மேலே குறிப்பிட்ட அனைவரும் இந்த சங்கத்தில் இணைந்து செயல்படலாம்.

கிராம கமிட்டி, ஒன்றிய கமிட்டி, மாவட்ட கமிட்டி, கோட்ட கமிட்டி, மாநில கமிட்டி, தேசிய கமிட்டி ஆகிய அனைத்தும் தேர்தல் முறையை கடைபிடித்து அமைக்கப்பட்டவைகளாகும். அவ்வாறு அமைக்கப் பட்ட கமிட்டிகளைக் கொண்டு பாரத தேசத்தின் கடைக்கோடி கிராமம் வரை வியாபித்துள்ளது நமது சங்கம்.

சங்கக் கொடி

நமது சங்கத்தின் கொடியானது நமது தேசத்தின் பாரம்பரியத்தை குறிக்கும் விதமாக காவி நிறம் உடையது. அதாவது சூரியன் காலையில் உதித்தெழும்போது காணப்படும் நிறம். அது நெருப்பைப் போன்று பரிசுத்தமான எழுச்சியை குறிப்பதும், அறிவு ஆற்றலை குறிப்பதும், அர்பணிப்பைக் குறிப்பதுமாய் அமைந்துள்ளது.

சங்கத்தின் சின்னம்

பாரதிய கிசான் சங்கம்

சங்கத்தின் முழக்கம்

“உழவு செய், உழவே செய்”

 

இந்த லட்சிய முழக்கமானது ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதன் அர்த்தம் என்னவென்றால் சூதாட்டம் செய்யாமல் உழவு செய்து அதன் வாயிலாகப் பெரும் செல்வத்தைக் கொண்டு சிறப்பாக வாழ வேண்டும் என்பதே ஆகும்.