குறிக்கோள்

சங்கத்தின் நோக்கம்

 • தேசிய அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் கல்வியில் வளர்ச்சி பெற வழிநடத்துதல்.
 • கால சூழலுக்கு ஏற்றவாறு விவசாயம் சார்ந்த தகவல் மற்றும் தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வை விவசயிகள் மத்தியில் ஏற்படுத்துதல்.
 • நமது தேசத்தின் பாரம்பரியமான விவசாய முறைகளை காத்து, வளர்ந்து வரும் புதிய உத்திகளை இணைத்து சூழலியல் பாதுகாப்பு, மண் வளம், நீர் வளம், விதைத் தன்மை, பசு, தாவரம் மற்றும் உயிர் வளத்தை காத்திட.
 • பாரம்பரியமான நமது விவசாயம் சார்ந்த அறிவு நுணுக்கங்களை சேகரித்து, பரிசோதனை செய்து, சிறந்த உத்திகளை இணைத்து, மேம்படுத்தி விவசாயிகளுக்கு வழங்குவதின் மூலம் நமது பாரம்பரியத்தை மற்ற நாடுகளுக்கு பறிகொடுக்காமல் தடுத்து காப்பது.
 • பயிற்சியளிப்பதற்கென்றே தனி குழுக்கள் அமைப்பது, பயிற்சிக்கான பயணங்கள் தேசிய மற்றும் உலகளவில் ஏற்பாடு செய்வது, கண்காட்சிகள் நடத்துவது, விவசயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள் நடத்துவது.
 • ஒத்த கருத்துடைய இயக்கங்களை தேசிய மற்றும் உலகளவில் இணைத்து செயல் திறனை மேம்படுத்துவது.
 • நமது நோக்கங்களை நிறைவேற்றிட மற்ற தொழிலாளர் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறை அமைப்புகள் மற்றும் சமூக, பொருளாதார கலாச்சார அமைப்புகளின் உதவிகளை கோரிப் பெறுவது.
 • விவசாயத்திற்கு இன்றியமையாததாக விளங்கும் தேசிய பசு இனத்தை காப்பது மற்றும் பிற வகை உயிரினங்களை காப்பது.
 • ஒருங்கிணைந்த கிராமம் போற்றி பேணிட, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்த்து மேலும் கிராமிய வல்லுனர்களாக விளங்கும் மற்ற தொழில் சார்ந்தவர்களையும் இணைத்து கொள்வது.
 • விவசாயின் நலம் காத்திட, விவசயிகளுக்கு, அரசு, அரசு சாரா நிறுவனங்களோடு இணைந்து பயிற்சி அளிப்பதன் மூலம் மண், நீர், இயற்கை சூழல் அமைப்பு, திறன் ஆகியவற்றால் மேலாண்மை அறிவு ஊட்டுதல்.
 • நமது விவசாயிகளை ஊக்குவித்து உழைப்பின் மூலம் நமது தேசத்தின் களஞ்சியங்களை நிரப்புவது, விவசாய விலை பொருட்களுக்கும் லாபகரமான விலைப் பெற்றே தீர்வது.
 • நீர் மேலாண்மையில் தன் நிறைவு பெறுவது.